அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல மகோற்சவ விழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2011 11:12
தென்காசி : அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் இன்று (17ம் தேதி) மண்டல மகோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கேரள மாநிலம் அச்சன்கோவிலில் அரசன் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று (17ம் தேதி) மண்டல மகோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கொடிபட்டம் ஏற்றப்படுகிறது. சிறப்பு தீபாராதனை நடக்கிறது. ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு ஐயப்பனுக்கு தீபாராதனை நடக்கிறது. மாலையில் சிறப்பு பூஜை, வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை கருப்பன் துள்ளல் நடக்கிறது. 25ம் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தின் போது ஐயப்பனின் அபூர்வ தங்க வாள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. கருப்பன் துள்ளலும் நடக்கிறது. மாலையில் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. 26ம் தேதி ஆராட்டு விழா நடக்கிறது. ஒவ்வொரு நாள் காலை, இரவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பிலும், சென்னையை சேர்ந்த ராமச்சந்திரன் சார்பிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.