பரமக்குடி : பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள பரமக்குடி ஐயப்பசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு ஐயப்பசுவாமிக்கும், சவுராஷ்ட்ர குலகன்னிகை புஷ்கலாதேவிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு, அபிேஷகம், தீபாராதனைக்குப் பின்னர் ஹரிவராசனம் இசைக்கப்பட்டு நடைசாற்றப்பட்டது. நேற்று காலை 8:00 மணிக்கு ஐயப்பசுவாமி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமும், பெண் வீட்டார் அழைப்பு, மாலை மாற்றல் நிறைவடைந்து, 10:30 மணிக்கு ஐயப்ப சுவாமி, புஷ்கலாதேவி ஊஞ்சலில் சேவை சாதித்தபடி திருக்கல்யாணம் நடத்தப் பட்டது. மதியம் 12:00 மணி தொடங்கி அன்னதானமும், இரவு 7:00 மணிக்கு புஷ்கலாதேவி சமேத தர்மசாஸ்தா திருக்கல்யாக கோலத்தில் பட்டுப்பல்லக்கில் பட்டண பிரவேசம் நடந்தது.