பதிவு செய்த நாள்
26
டிச
2017
12:12
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம், சாலைத் தெருவில் உள்ள துாய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இரவு 12:00 மணிக்கு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடந்தது. ராமநாதபுரம் மறைவட்ட அதிபர் அருள் ஆனந்த் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி, பிரார்த்தனை செய்தார். உதவி பங்கு தந்தை பிரான்சிஸ் ஜெரி, திண்டுக்கல் கம்பூச்சியன் சபை பாதிரியார் சூசை மாணிக்கம் மறையுரையாற்றினார். பங்கு பேரவை துணைத் தலைவர் ஜெகநாதரவி, செயலர் டாக்டர் எஸ்.ஜெபாஸ்டியான், பொருளாளர் ஜோசப்ராயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து சர்ச்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. பரமக்குடி அலங்காரமாதா சர்ச்சில் சிறப்பு திருப்பலி,கூட்டு பிரார்த்தனை பாடல்கள் இசைக்கப்பட்டன.காட்டுப்பரமக்குடி, உலகநாதபுரம் சர்ச்களிலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.
திருவாடானை: தொண்டி அருகே காரங்காடு துாய செங்கோல் அன்னை, திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் துாய பேதுரு ஆலயங்களில் கிறிஸ்துமஸ் தின விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை: கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு, பரதர்தெரு புனித அந்தோணியார் சர்ச்சில் கிறிஸ்து பிறந்த நாள் பெருவிழா சிறப்புத்திருப்பலியுடன் நடந்தது. நள்ளிரவு 1:30 மணி வரை சிறப்பு வழிபாடு நடந்தது. கிறிஸ்துவின் மறையுரை அருளப்பட்டது. பண்ணாட்டார் தெரு அந்தோணியார் சர்ச்சில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கீழக்கரை சி.எஸ்.ஐ துாய பேதுரு சர்ச்சில் சிறப்பு திருப்பலி நடந்தது. இயேசு கிறிஸ்து வின் நற்செய்தி அனைவருக்கும் பகிரப்பட்டது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். முத்துப்பேட்டை புனித காணிக்கை அன்னை சர்ச்சில் கிறிஸ்துமஸ் விழாவினையொட்டி நள்ளிரவில் பங்குத்தந்தை கூட்டுத்திருப்பலியினை நடத்தினார். மூக்கையூர் புனித யாகப்பார் சர்ச், மேலக்கிடாரம் மடத்துக்குளம் சி.எஸ்.ஐ., சர்ச், கடலாடி புனித அந்தோணியார் சர்ச், சவேரியார் பட்டிணம் புனித சவேரியார் சர்ச், சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி சர்ச் ஆகிய இடங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.