பதிவு செய்த நாள்
26
டிச
2017
12:12
குமாரபாளையம்: குமாரபாளையம், ஆதி பராசக்தி கோவிலில், இருமுடி கட்டுதல் உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடந்தது. குமாரபாளையம் திருவள்ளுவர் நகர், ஆதி பராசக்தி கோவிலில் ஆன்மிக குருவின், 78ம் ஆண்டு விழா, கலச விளக்கு பூஜை, இருமுடிகட்டுதல், ஆடை தானம் மற்றும் அன்னதானம் ஆகிய ஐம்பெரும் விழா மற்றும் கணபதி பூஜையுடன் உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை, குரு பூஜை, ராஜ ராஜேஸ்வரி பூஜை நேற்று நடந்தது. காலை, 5:00 மணிக்கு உபயதாரர்களால் சக்தி கொடியேற்றம், கலச விளக்கு வேள்வி பூஜை, ஆடைகள் தானம், இருமுடி அணிதல், அன்னதான விழா துவங்கப்பட்டது. ஆதிபராசக்தி அன்னைக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.