பதிவு செய்த நாள்
28
டிச
2017
02:12
ஊட்டி, : ஊட்டி, காந்தள் மூவுலகரசி அம்மன் கோவிலில், 21ம் ஆண்டு மண்டல பூஜையையொட்டி, டிச., 24ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, மஹா கணபதி ேஹாமம், சகஸ்கர அர்ச்சனை நிகழ்ச்சி மற்றும் உச்சிகால பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மண்டல பூஜை, படிபூஜை, சுவாமி ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. ஜன., 1ம் தேதி புத்தாண்டை முன்னிட்டு காலை, 5:00 மணி முதல் சிறப்பு ேஹாமமும், சிறப்பு அபிேஷகம், மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி, மாலை 6:00 மணிக்கு மகர ஜோதி பூஜை, பிரசாத வினியோக ம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சபரிமலை மண்டல பூஜை குழுவினர் செய்து வருகின்றனர்.