திண்டுக்கல் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2017 12:12
திண்டுக்கல்: திண்டுக்கல் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மலையடிவார சீனிவாசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் வழியாக வந்து, சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பழநி பாலசமுத்திரம் பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அகோபிலவரதராஐப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள், காத்திருந்து தரிசனம் செய்தனர்.