திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2017 01:12
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட பரிமளரெங்கநாதர் கோயிலில் அமைந்துள்ளது. பஞ்ச அரங்க கோயி ல்கள் இது, ஐந்தாவது கோயிலாகும். 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில் சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதுமானது. இக்கோயிலில் ஏ காதசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாள் தங்க ரெத்தின அங்கி அலங்காரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப்பின், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை சேவித்தனர்.