பதிவு செய்த நாள்
29
டிச
2017
01:12
நரசிங்கபுரம்: சொர்க்கவாசல் திறப்பின்போது யாருக்கும் முதல் மாரியாதை அளிக்கக்கூடாது என, தாசில்தார் முத்துராஜா கூறினார். நரசிங்கபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், வழிபாடு செய்வதில் இருதரப்பிடையே பிரச்னை உள்ளது. இன்று, வைகுண்ட ஏகாதசியொட்டி நடத்தப்படும் சொர்க்கவாசல் திறப்பில், முதல் மரியாதை வழங்குவதில், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. நேற்று, ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில், இருதரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, தாசில்தார் முத்துராஜா பேசியதாவது: சொர்க்கவாசல் திறப்பின்போது, யாருக்கும் ’முதல் மரியாதை’ தரப்படமாட்டாது. முதலில், அர்ச்சகர் செல்வார், பின் மக்கள் ஒவ்வொருவராக செல்ல வேண்டும். ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.