ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. விழாவையொட்டி அதிகாலையில் மூலவர் பெருமானுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து கோவில் உள்பிரகார உலா நடந்து காலை 7.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவ மூர்த்தி யக்ஞவராகன், பூதேவி, ஸ்ரீதேவியோடு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுவாமி வீதியுலா நடந்தது. காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. முருகுமாறன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். செயல் அலுவலர் மதனா மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.