பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2017 05:12
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வரதராஜா பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை வரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. அதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, துவார பூஜைகள் முடிந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை, சீனிவாச பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் பரம்பரை டிரஸ்டி வரதராஜ பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.