விருத்தாசலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2017 09:12
விருத்தாசலம்: வைகுண்ட ஏகாதசியொட்டி, விருத்தாசலம் பெருமாள் கோவில்களில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் சுவாமிக்கு திருப்பாவை சேவை உற்சவம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு திருமஞ்சனம், 5:00 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கருடாழ்வார் வாகனத்தில் தாயாருடன் ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர், நம்மாழ்வார் புறப்பாடு, சிறப்பு உற்சவம் நடந்தது. அதேபோல், சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கோவிந்தா கோஷமிட்டு, தரிசனம் செய்தனர்.