பதிவு செய்த நாள்
30
டிச
2017
11:12
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தி ரராஜ பெருமாள் கோயில், மலையடிவாரம் சீனிவாசபெருமாள்கோயில், நாகல் நகர் வரதராஜ பெருமாள்கோயில், எம்.வி.எம்., நகர் பெருமாள் கோயில், திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில், ராம்நகர் கோயில், கூட்டுறவு நகர் பெருமாள்கோயில் உட்பட பல கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது.
இதையொட்டி காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா நாமத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி: மேற்குரத வீதியிலுள்ள லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு பரமபதவாசல் (சொர்க் கவாசல்) திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள் கருடவா கனத்தில் எழுந்தருளினார். பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள்கோயில். கண்ணாடிப்பெருமாள் கோயில், வேணுகோபால சுவாமிகோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. பழநி புஸ்ப கைங்கரிய சார்பில், லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் ஆயிரம் கிலோ பூக்களால் அலங்காரம், புளியோதரை, பொங்கல், தயிர் உள்ளிட்ட எட்டுவகை சாதங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் வெங்கடேசப்பெருமாள் கோயிலில், பெரு மாள் வெள்ளிக்கவச அலங்காரத்துடனும், மகா லட்சுமிக்கு சிறப்பு மலர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. தீபாராதனையைத் தொடர்ந்து, கோவிந்த கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு திருப்பதி அலங்காரமும், உற்சவர் ராமருக்கு ரெங்கநாதப்பெருமாள் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், உற்ஸவர் கருட சேவையில் எழுந்தருளினார். ராமா னுஜர் சிறப்பு அபிஷேக, ஆராதனைக்குப்பின், சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
தாண்டிக்குடி: தாண்டிக்குடி ராமர் கோயிலில் எழுந்தருளிய சவுமிய நாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளித்தார். சொர்க்க வாசல் அதிகாலை 5:00 மணிக்கு திறக் கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக பஜனை மடத்தில் இருந்து புறப்பட்ட ராமர், பெருமாள் கோயிலுக்குள் எழுந்தருளினார். சன்னதியில் இருந்த புறப்பட்ட ஆழ்வார் சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் வந்தார்.
காத்திருந்த பக்தர்கள் கோஷமிட்டு வணங்கினர். இதனை தொடர்ந்து கருட வாகனத்தில் அருள்பாலித்த பெருமாள் காலை 7:30 மணிக்கு சொர்க்க வாசல் வழியே புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்தார்.
எரியோடு: எரியோடு சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் அலங்கார திருமஞ்சனத்தை தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. எ.பண்ணைப்பட்டி பெரு மாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
மண்டபம்புதூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.