பதிவு செய்த நாள்
30
டிச
2017
04:12
கோபி: பாரியூர் குண்டம் தேர்த்திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கோபி, பாரியூரில்
பிரசித்தி பெற்ற, கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம்
தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் இரவு, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து,
குண்டம் இறங்கும் பக்தர்கள், விரதம் கடைப்பிடிக்க துவங்கியுள்ளனர். பூச்சாட்டு மற்றும்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிலில் காலை முதல் குவிந்தனர். பெண்கள், குண்டத்தில் தீபமேற்றி வழிபட்டனர். இதனால், கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டது. ஜன.,11ல் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்கின்றனர்.