பதிவு செய்த நாள்
30
டிச
2017
04:12
ஈரோடு: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, பரமபதவாசல் வழியாக எழுந்தருளிய பெருமானை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆண்டுக்கு ஒருமுறை, வைணவ திருத்தலங்களில் நடைபெறும், வைகுண்ட ஏகாதசி விழா வில், சொர்க்கவாசல் வழியாக சென்று, சுவாமி தரிசனம் செய்தால், பாவங்கள் நீங்கி, புண் ணியம் பெறலாம் என்பது ஐதீகமாக உள்ளது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி நாளான நம்பெரு மாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலர் அலங்காரத்தில், அதிகாலை, 5:00 மணிக்கு, வைகுண்ட சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலில் எழுந்தருளினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர். வி.ஐ.பி.,க்கள் பலரும் கலந்து
கொண்டனர். டவுன் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட
போலீசார், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோட்டை தெப்பக்குள மைதானத்தில் இருந்து, நீண்ட வரிசையில் நின்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், சொர்க்கவாசல் வழியாக சுவாமியை தரிசித்தனர்.
* கொடுமுடி மகுடேசுவரர் கோவில் வளாகத்தில் உள்ள வீரநாராயணப் பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு, அதை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பெருமாள் கருட வாகனத்தில் திருக்கொட்டகை பிரவேசம் நிகழ்த்தினார்.
* சென்னிமலை, மேலப்பாளையத்தில் ஆதிநாராயண பெருமாள் கோவிலில், அலர்மேலு
மங்கை, நாச்சியார் அம்மை சமேத ஆதிநாராயண பெருமாள், பரமபதவாசல் வழியாக
எழுந்தருளினார். முருங்கத்தொழுவு, வடுகபாளையம் அணிரங்க பெருமாள் கோவிலில்,
அலமேலு மங்கை, நாச்சியார் அம்மை சமேதராக அணிரங்க பெருமாள் எழுந்தருளினார்.
* வெள்ளோடு, ஆலவாய் தண்ணீர்பந்தல் தர்மம் கிருஷ்ணப்பெருமாள் கோவிலில், இரவு
முழுவதும் தம்பதியர் சங்கல்பம் நடந்தது. அதை தொடர்ந்து நள்ளிரவு, 12:00 மணிக்கு,
108 சங்குபூஜை, சங்காபிஷேகம் நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல்
திறக்கப்பட்டது.
* பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள், பரமபத வாசல் வழியாக எழுந்தருளினார்.
* பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, கோட்டை பிரசன்ன வெங்கடரமண
சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலையில் சிறப்பு யாகம்
நடந்தது. அதை தொடர்ந்து சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. உற்சவர், விசேஷ
அலங்காரத்தில் காட்சியளித்தார். இதேபோல், திருவாச்சி கிராமம், தோட்டாணி, கரியபெரு மாள் கோவில், எல்லப்பாளையம், கரியமாணிக்க பெருமாள் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி விழா விமர்சையாக நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி, அவினாசி சாலையில் உள்ள, கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 6:00 மணிக்கு சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டது. கருடாழ்வார் வாகனத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் எழுந்தருளி, சொர்க்கவாசல் வழியாக புறப்பாடாகி பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.
* சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோவிலில், அதிகாலை சிறப்பு பூஜைகளை தொடர் ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, கஸ்தூரி ரங்கநாதர், எழுந்தருளினார்.
விழாவையொட்டி திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட, கஸ்தூரி ரங்கராதர், கல்யாண மகால ட்சுமி மற்றும் லட்சுமி நாராயண பெருமாள், முத்தங்கி சேவையில் அருள் பாலித்தனர்.
*கோபி, பாரியூரில், பிரசித்தி பெற்ற, ஆதிநாராயண பெருமாள் கோவிலில், காலை, 6:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். துளசி மாலையுடன் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். இதேபோல், பச்சமலை மரகத வெங்கடேச பெருமாள் கோவில், பொலவக்காலி பாளையம் மகாலட்சுமி சமேத அரங்கநாதர், அனுமந்தராய சுவாமி கோவில், குள்ளம்பாளையம் பெருமாள் கோவில் என அனைத்து பெருமாள் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடந்தது.