பதிவு செய்த நாள்
30
டிச
2017
05:12
சேலம்: வைகுண்ட ஏகாதசியையொட்டி, சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களில்,
வெள்ளிக்கிழமை, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொட்டும் பனியிலும் காத்திருந்து, ஏராள மான பக்தர்கள், பெருமாளை தரிசித்தனர்.
சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், அதிகாலை மூலவர், சுந்தரவல்லி தாயார், கருடா ழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், விஷ்ணு துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு தங்க கவசம் சார்த் துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, உற்சவர் அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்த ளினார். அப்போது, பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்ப, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அந்த வழியாக, வெளியே வந்த பெருமாள், பரமபத வாசல் வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து, பெருமாளை தரிசித்தனர்.
அம்மாபேட்டை, சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின், ரத்தின அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சின்னக்கடை வீதி, வரதராஜப் பெருமாள், ரத்தின அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளித்தார். அதேபோல், சின்னக்கடை வீதி வேணுகோபாலர், பச்சப்பட்டி லட்சுமி வெங் கடாசலபதி, செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள், உத்தமசோழபுரம் அழகிரிநாதர், ஆத்தூர் வெங்கடேச பெருமாள், இடைப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள், காளிப்பட்டி சென்றாய பெருமாள், ஓமலூர் காருவள்ளி வெங்கட்ரமணர், நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர், வாழப்பாடி சென்றாய பெருமாள் உள்பட, மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை, கொட்டும் பனியிலும், ஏராளமான பக்தர்கள் காத்திருந்து, பெருமாளை தரிசித்தனர்.