பதிவு செய்த நாள்
01
ஜன
2018
03:01
கொடுமுடி: ஊஞ்சலூரில் ஸத்குரு சேஷாத்ரி ஸ்வாமிகளின், யோக சமாதி வைதீக முறையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும், ஐந்து நாட்கள் ஆராதனை விழா நடக்கிறது. இதன்படி, 89ம் ஆண்டு ஆராதனை விழா, வரும், 5ல் காலை, 5:30 மணிக்கு தொடங்குகிறது. அதை தொடர்ந்து, 8ம் தேதி வரை, தனுர்மாஸ பூஜை, வேத பாராயணம், லட்சார்ச்சனை, உஞ்சவிருத்தி பூஜை, மஹனீயர்கள் உபதேசம், நவாவரண பூஜை, தீபாராதனை நடக்கிறது. ஜன.,10ல் சேஷாத்ரி சுவாமிகளுக்கு ஆராதனை விழா நடக்கிறது. ஜன.,5 முதல், 8 வரை, தினசரி மதியம், 3:00 மணி முதல், 5:30 மணி வரை சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஜன.,5ல் வயலின், 6ல் குமாரி மாத்மிகாவின் சாய் பஜனை மண்டலி நாம சங்கீர்த்தனம், 7ல் சட்டநாத பாகவதர் குழுவின் நாம சங்கீர்த்தனம், 8ல் ராம்நகர் பஜன் கோஷ்டி குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.