பதிவு செய்த நாள்
01
ஜன
2018
03:01
ஈரோடு: ஆருத்ர காபாலீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, நாளை நடக்கிறது. ஈரோடு, கோட்டை வருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த, 10 நாட்களாக அதிகாலை, மாணிக்கவாசகர் திருவீதியுலா சென்று வருகிறார். காமராஜர் வீதி, வக்கில் சாமி வீதி, திருவேங்கிடசாமி வீதி பகுதி பெண்கள், வாசலில் கோலமிட்டு நைவேத்தியம் படைத்து வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இன்று அதிகாலை பிட்சாண்டார் உற்சவம், மாலை திருவீதியுலா, அதைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை, சிவகாமியம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் தருகிறார். மாலையில் திருவீதி உலா, விடையாற்றி அபி?ஷகம், சோமஸ்கந்தர் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
* சென்னிமலை கைலாசநாதர் சுவாமி கோவிலில், நாளை ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. இதையொட்டி இன்றிரவு, 9:00 மணிக்கு, நடராஜர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து இரவு, 10:00 மணிக்கு, 34 வகையான பழங்கள் மற்றும் அபிஷேகம் நடக்கிறது. நாளை மீண்டும் சிறப்பு பூஜைகள் செய்த பின், சுவாமி அலங்கரிக்கப்பட்டு, காலை,7:00 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது.