மொடக்குறிச்சி: எழுமாத்தூர் அருகே, துக்காச்சி செல்வக்குமாரசாமி, குப்பய்யண்ணசாமி கோவில் உள்ளது. இங்கு பொங்கல் விழா, கடந்த மாதம், 22ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து காவிரி தீர்த்தம், நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா, நேற்று நடந்தது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.