நடராஜருக்கு பஞ்ச சபைகள் என ஐந்து கோயில்கள் உள்ளன. அவை சிதம்பரம் - கனக சபை, மதுரை - வெள்ளியம்பலம், திருநெல்வேலி - தாமிரசபை, திருவாலங்காடு - ரத்தின சபை, குற்றாலம் - சித்திர சபை. ஆருத்ரா தரிசன நன்னாளில் இத்தலங்களை தரிசிப்பதை பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர்.