திருக்கோவிலூர் தபோவனத்தில் ஞானானந்தகிரி ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2018 02:01
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில், ஞானானந்தகிரி சுவாமிகளின், ஆராதனையை முன்னிட்டு 108 சங்காபிஷகம் நடந்தது. திருக்கோவிலுார்‚ குடமுருட்டி‚ ஞானானந்தா தபோவனத்தில்‚ ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆராதனை விழா‚ கடந்த மாதம் 20ம் தேதி துவங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 8:00 மணிக்கு‚ அதிஷ்டானத்தில் 108 கலச அபிஷகம்‚ வேதபாராயனம்‚ ஆயிரத்தி எட்டு சங்காபிஷேகம்‚ அலங்காரம்‚ சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி‚ ஆருத்ரா தரிசனம்‚ ஊடல் உற்சவம் நடந்தது. பரனுார் கிருஷ்ணபிரேமி சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று காலை 10:15 மணிக்கு துவங்கி‚ மதியம் 1:30 மணிவரை ஆராதனை நிகழ்ச்சியாக, தீர்த்தநாராயண பூஜைகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.