செஞ்சி : செஞ்சி யோகமுனீஸ்வரர் கோவிலில் தன்வந்தரி யாகம் நடந்தது. செஞ்சி சேத்துப்பட்டு சாலையில் உள்ள யோக முனீஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு தன்வந்தரி யாகம் நடந்தது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம், தன்வந்தரி ஹோமம், மகாசக்தி ஹோமம் ஆகியன நடந்தது. தொடர்ந்து முனீஸ்வரனுக்கு பால்,சந்தனம், தயிர், பன்னீர் உள்ளிட்ட 11 வகை திரவியம் மற்றும் கலச புனிதநீர் கொண்டு அபிஷேகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.