பதிவு செய்த நாள்
06
ஜன
2018
01:01
கொடுமுடி: கொடுமுடி, ஊஞ்சலூர் அருகே, கொளத்துப்பாளையம் கிராமம், காவிரி ஆற்றின் மேற்கரையில் விநாயகர், மகா மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன. சில மாதங்களுக்கு முன், திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நேற்று சிவாஹம முறைப்படி, மகா கும்பாபிஷேக விழா நடந்தது.இதை தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஊஞ்சலூர், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.