பதிவு செய்த நாள்
08
ஜன
2018
12:01
மணலிபுதுநகர் : மணலிபுதுநகரில், குழந்தை இயேசு ஆலய தேர் பவனி திருவிழாவில், 1,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மணலிபுதுநகர், அற்புத குழந்தை இயேசு திருத்தலம் பிரசித்து பெற்றது. இந்த ஆலயத்தின், 38ம் ஆண்டு பெருவிழா, கடந்த, 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வான, தேர் பவனி, நேற்று முன்தினம் இரவு, வெகு சிறப்பாக நடந்தது. முன்னதாக, தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.பிரார்த்தனைக்கு பின், மாதா, குழந்தை இயேசு ஆகியோர், அலங்கரிக்கப்பட்ட தேரில், பொன்னேரி விரைவு சாலை, மணலிபுதுநகர் பால் பூத், அந்தோணியர் ஆலயம், திருவள்ளுவர் சிலை வரை, வீதிஉலா வந்தனர். 1,000த்திற்கும் மேற்பட்டோர் அணிவகுக்க, தேர் பவனி, சிறப்பாக நடந்தது.நேற்று, குழந்தை இயேசு ஆண்டு பெருவிழாவில், சிறப்பு பிராத்தனைகள் நடத்தப்பட்டன. இரவு, கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெற்றது.