மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் மூன்று ராஜாக்கள் திருவிழா நடந்து. மூங்கில்துறைப்பட்டு, சவரியார்பாளையம், கோனத்தாங்கொட்டாய், மைக்கேல்புரம், ஈருடையாம்பட்டு, அருளம்பாடி ஆகிய கிராமங்களில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதனை தொடர் நிகழ்ச்சியாக நேற்று அனைத்து பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் ஏசு பிறப்பினை பார்க்க மூன்று ராஜாக்கள் செல்வதுபோல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியினை அருட்தந்தை மகிமை தலைமையில் நடைப்பெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்துக்கொண்டனர்.