மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மாதேஸ்வரர் கோவிலில், நாளை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது.சனிப்பெயர்ச்சியையொட்டி, சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாதேஸ்வரர் கோவிலில் காலை 7 ல் இருந்து பகல் 12.30 மணி வரை சனிபகவானுக்கு வேள்வியும், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகளும், பரிகார சங்கல்ப பூஜைகளும் நடைபெறுகின்றன. இதில், பங்கேற்க விரும்புபவர்கள் கோவில் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை நந்தவனம் வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் திருசபை அறக்கட்டளையினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்கின்றனர்.