பதிவு செய்த நாள்
20
டிச
2011
12:12
ராசிபுரம்: ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், நாளை (டிச., 21) சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. சனிபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு, நாளை (டிச., 21) இடப்பெயர்ச்சி ஆகிறார். நவக்கிரக பக்தர்கள் குழு சார்பில், ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி இன்று (டிச., 20) துவங்குகிறது. இன்று மாலை 3 மணிக்கு நவக்கிரக ஹோமம், 108 சங்கு ஆவாகனம், சங்கல்ப பூஜை நடக்கிறது. இரவு 7 மணி முதல் சனிஸ்வர பகவானுக்கு விசேஷ சிறப்பு அபிஷேகம், 108 வகைப் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, ஸ்வர்ணாபிஷேகம், ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட, 108 சங்குகளால் அபிஷேகம் நடக்கிறது. நாளை (டிச., 21) காலை 6 மணி முதல் 7மணி வரை சனிப்பெயர்ச்சி விளக்கம், சனிபகவான் வழிபாடு, பரிகார முறைகள் குறித்து விளக்கப்படுகிறது. காலை 7.51 மணிக்கு சனிப்பகவான் பெயர்ச்சி அடைகிறார். அதை தொடர்ந்து, இரவு 7மணிக்கு உலக நன்மைக்காக சிறப்பு விளக்கு பூஜை நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் குழு மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.