Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2): ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை): உடல்நலம் மேம்படும் விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3): சிறப்பான வளர்ச்சி
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3): சிறப்பான வளர்ச்சி

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
03:01

நல்லவர்களுக்கு துணை நிற்க விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!

புதன் ஜன.22-ல் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கு மாறி நன்மை செய்வார். இந்த மாதம் சுக்கிரன் மகர ராசியில் இருந்து, பிப்.7ல் கும்ப ராசிக்கு மாறினாலும் மாதம் முழுவதும் சிறப்பான வளர்ச்சியை தருவார். மேலும் சனி பகவானால் மாதம் முழுவதும் நன்மை  கிடைக்கும். செயலில் வெற்றி,  பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் விருத்தியை தருவார்.

குடும்பத்தில் சுக்கிரனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஜன.21க்கு பிறகு பொன், பொருள் சேரும். கணவன்,- மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிப்.6,7ல் பெண்களால் சுகம் உண்டாகும்.  விருந்து, விழா என சென்று வருவீர்கள். செவ்வாயால் ஜன. 19-க்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பிப்.7-க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பக்தி உயர்வு மேம்படும். தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். சூரியனால் பெண்களிடம் விரோதம் ஏற்படலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். பகைவர் இடையூறு, அரசு வகையில் அனுகூலமற்ற போக்கு ஜன.21க்கு பிறகு மறையும். அது வரை வரவு-,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஜன. 22,23-ல் திடீர் பண வரவு கிடைக்கும். பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். ஜன.14, பிப்.4,5,8,9,10 ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். செவ்வாயால் பிப்.7-க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும்.

தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். பணியாளர்கள் சுக்கிரன் பலத்தால் பணியில் திருப்தி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மாதத் தொடக்கத்தில் அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். தனியார் துறையினருக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. ஜன.21-க்கு பிறகு புதனால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.  ஜன.31, பிப்.1ல் திடீர் வருமானம் காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைப்பது நல்லது.  பிப்.7-க்கு பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். புகழ், பாராட்டு கிடைக்கும். சிலருக்கு அரசிடம் இருந்து விருது வரலாம். அரசியல்வாதிகள் நல்ல பணப் புழக்கத்தில் இருந்தாலும் எதிர்பார்த்த பதவி கிடைக்காது. ஜன. 20,21-ல்  மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் மாத முற்பகுதியில் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பிரச்னையை சந்திக்கலாம் கவனம். சிரத்தை எடுத்து படிப்பது அவசியம்.

ஆசிரியர் அறிவுரையை கேட்டு நடக்கவும். ஜன.21-க்கு பிறகு  போட்டிகளில் வெற்றி காணலாம். விவசாயிகளுக்கு காலநடைவளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக தள்ளி போடுங்கள். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக அமையும்.  பெண்களுக்கு குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள்  ஆதரவுடன் செயல் படுவர்.  அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். ஜன.21-க்கு பிறகு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.  சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். சகோதரிகளால் உதவி கிடைக்கும். செவ்வாயால் ஜன.19-க்கு பிறகு உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

* நல்ல நாள்:  ஜன.15,16,22,23,24,25,31, பிப்.1,2,3,6,7,11,12
* கவன நாள்:  ஜன.26,27,28- சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: வெள்ளை, கருப்பு

பரிகாரம்:

● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு
● தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் அபிஷேகம்
● வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய் விளக்கு

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar