Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2): விடாமுயற்சி வெற்றி தரும் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1): வீடு வாங்க யோகம்
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1): வீடு வாங்க யோகம்

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
03:01

தங்கமனம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மைகளைத் தருவார். செவ்வாயால் பலன் கிடைக்க வாய்ப்பில்லை. குரு  பல விதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். அவரது 7 மற்றும் 9ம் இட பார்வைகள் சாதகமான இடத்தில் விழுகின்றன. அதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதிய வீடு, -மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். புதனால் வீட்டில் இருந்த பிரச்னை,உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு, பொருள் இழப்பு முதலியன நீங்கும். ஜன.22,23-ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். ஆனால் பிப்.6,7ல் அவர்கள் மூலம் நன்மை நடக்கும்.  பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். கணவன், -மனைவி இடையே பாசம் மேலோங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். சனி ஏழரையாக ஜென்மத்தில் இருப்பதால், ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்க வேண்டும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சுக்கிரனால் அரசின் சலுகை, வங்கிக் கடன் கிடைக்கும். குரு சாதகமாக இருப்பதால் பிற்போக்கான நிலை உருவாகாது. உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றியுடன் இருப்பர். சனி, போட்டியாளர்கள் வகையில் தொல்லை தருவார். ஜன.17,18,19, பிப்.8,9,10ல் பணம் விரயம் ஆகலாம். ஜன. 26,27,28-ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மாத பிற்பகுதியில் சற்று சிரமம் இருக்கும்.
பணியாளர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு பாதிக்கப்படலாம். வேலையில் இருந்து வந்த அலைச்சல். பணிச்சுமை குறையும். பிப். 4,5-ல் எதிர்பாராத சலுகை கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். அலுவலக வகையில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். பதவி உயர்வுக்காக போராடுபவர்கள் பிப்.6-க்கு பிறகு முயற்சி செய்தால் கிடைக்க வழியுண்டு.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும்  சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம். கவனம். குரு சாதகமான இடத்தில் இருப்பதால், முயற்சிக்கேற்ப வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும்.

கலைஞர்களுக்கு சுக்கிர பலத்தால் நற்பெயரும் புகழும் உண்டாகும். அரசிடம் இருந்து விருது, புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். விவசாயிகள் சொத்து வாங்கலாம். எள், பனை பொருள் மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.  புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு, விவகாரங்கள் இழுத்தடிக்கும். கைவிட்டு போன பொருட்கள் ஜன.19-க்குள் கிடைக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். பதவி தேடி வரும். பிப்.6-க்கு பிறகு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். ஜன.20,21-ல் புத்தாடை, நகை வாங்கலாம். ஜன.29,30ல் விருந்து,விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் பணவரவு இருக்கும். கண் தொடர்பான நோய் வரலாம். கவனம்.

* நல்ல நாள்: ஜன. 20,21,26,௨௭,௨௮,௨௯,30,  பிப். 4,5,
* கவன நாள்: ஜன. 31 பிப். 1 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7   நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்:

● ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் தீபம்.
● புதன் கிழமை குல தெய்வ தரிசனம்.
● வியாழனன்று ராகவேந்திரர் வழிபாடு.

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar