கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை காவிரி ஆற்றிலிருந்து, பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்துச் சென்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, மத்திப்பட்டி பகுதி மக்கள், பழனி முருகன் கோவில் பக்தர்கள், மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு செல்கின்றனர். நேற்று காலையில், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தக் குடம் எடுத்துக் கொண்டு, மத்திப்பட்டி முருகன் கோவிலில் ஊற்றி சிறப்பு வழிபாடு பூஜை செய்தனர். இந்த விழாவில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவரும் பழனி முருகன் கோவிலுக்கு நடந்து சென்று நேர்த்திகடன் செலுத்துகின்றனர். ஏற்பாடுகளை மத்திப்பட்டி பழனி பாதயாத்திரைக் குழுவினர் செய்திருந்தனர்.