பதிவு செய்த நாள்
10
ஜன
2018
01:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த பாவை திருவிழாவில், 400 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் கூட்டரங்கில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பாவை திருவிழா நேற்று நடந்தது. அறநிலைய துறை உதவி ஆணையர் நித்யா தலைமை வகித்து, போட்டியை துவக்கி வைத்து பேசினார். விழாவில், திருப்பாவை மற்றும் திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தன. இதில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு, ஆறு முதல், எட்டாம் வகுப்பு, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை என, மூன்று பிரிவுகளில் நடந்த போட்டியில், மாவட்டத்தில் இருந்து, 400 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், முதல், மூன்று இடங்களில் வெற்றி பெற்ற, 36 மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அறநிலையத்துறை ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள், உதவி ஆணைய அலுவலக பணியாளர்கள், அறங்காவலர் குழுவினர் பங்கேற்றனர்.