குளித்தலை: குளித்தலை, கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர் சன்னிதியில், அஷ்ட பைரவர் பூஜை, நேற்று மாலை நடந்தது. பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. இதேபோல், சிவாயம் சிவபுரீஸ்வர் கோவிலில், பைரவர் பூஜை நடந்தது. ஆர்.டி.மலை விரையாச்சிலை ஈஸ்வரர் கோவிலில், அஷ்ட பைரவர் பூஜை, அர்ச்சகர் கந்தசுப்பிரமணிய சிவாச்சாரியார், வேதரத்தினம் குருக்கள் ஆகியோர் நடத்தினர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.