பதிவு செய்த நாள்
10
ஜன
2018
01:01
திருத்தணி : மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் மத்துாரில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், மூலவருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், நேற்று, மார்கழி மாத செவ்வாய்க்கிழமையொட்டி, காலை, 8:00 மணிக்கு, 108 லிட்டர், பாலாபிஷேகம், மூலவர் அம்மனுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து, வண்ணமலர் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. பிற்பகல், 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை, மூலவர் அம்மனுக்கு ராகுகால பூஜைகள் நடந்தன. அப்போது, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். இதே போல், திருத்தணி பகுதிகளில் உள்ள, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.இதே போல், ஆந்திர மாநிலம், நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில் உள்ள, தேசம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமையொட்டி, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன. இதில், தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து, 2,500 பெண்கள் பங்கேற்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.