பதிவு செய்த நாள்
11
ஜன
2018
12:01
பழநி: தமிழக கோவில்களில், வருமானத்தில் முதல் இடத்தில், பழநி மலைக்கோவில் உள்ளது. சாதாரண நாட்களில், மாத உண்டியல் வருமானம், 1.5 கோடி ரூபாய் வரை உள்ளது. தற்போது சபரிமலை, தைப்பூச விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், 2017 டிச., மாதம் கால பூஜை, தரிசனம், அபிஷேகம், அர்ச்சனை பூஜை பொருட்கள், தங்கத் தொட்டில் உள்ளிட்டவை மூலம், 7.93 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தங்க ரதம், 43.50 லட்சம் ரூபாய், பஞ்சாமிர்தம், 4.70 கோடி ரூபாய் என, ஒரு மாதத்தில், 13 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி உள்ளது. இதில் உண்டியல் காணிக்கை சேரவில்லை. இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், புரோக்கர்கள் நடமாட்டம், செக்யூரிட்டிகள் வசூல் தடுப்பு மற்றும் வி.ஐ.பி., தரிசன கட்டணம், 100 ரூபாயானது உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டை விட, 1.5 கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது என்றார்.