உடுமலை:ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி, கடைகள் அமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில், நேற்று ஏலம் விடப்பட்டது.உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கோவிலில், பொங்கலையொட்டி நடக்கும் திருவிழா, வரும் 15ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, கோவில் அருகே கடைகள், பொழுதுபோக்கு விளையாட்டு சாதனங்கள் அமைக்க, இந்து அறநிலையத்துறை சார்பில், ஏலம் விடப்படும். நேற்று கோவில் வளாகத்தில் நடந்த ஏலத்தில், 14 பேர் பங்கேற்றனர். இதில், 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. செயல் அலுவலர் ஜெயசெல்வம் முன்னிலையில் இந்த ஏலம் நடத்தப்பட்டது.