Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி பெருமாள் கோயிலில் ... வீரராகவப்பெருமாள்  கோவிலில் கூடாரை வெல்லும் சீர் உற்சவ விழா வீரராகவப்பெருமாள் கோவிலில் கூடாரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜப்பெருமாள் கோவில் மார்கழி 29ம் நாள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரதராஜப்பெருமாள் கோவில் மார்கழி 29ம் நாள் வழிபாடு

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
11:01

அன்னுார்: அன்னுார் அருகே வரதையம்பாளையத்தில், பழமையான வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், நாளை காலை, 5:30 மணிக்கு ‘சிற்றஞ்சிறு காலே வந்துன்னை சேவித்து’ எனத்துவங்கும் பாடலை பாடி, பக்தர்கள் பெருமாளை சேவிக்கின்றனர்.

கோவை – சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கணேசபுரத்தில் இருந்து மேற்கே, 3 கி.மீ., தொலைவில் உள்ளது இந்த கோவில். இங்கு புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமைகளில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாதம் வழிபாடு நடக்கிறது. இங்கு வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக காட்சியளிக்கிறார். குன்னத்துார், அன்னுார், புளியம்பட்டி, காரமடை, ஊட்டி உள்ளிட்ட பல ஊர் மக்களுக்கு, இக்கோவில் குலதெய்வமாக உள்ளது.

இங்கு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5:30 மணிக்கு, திருப்பாவை பாசுரம் பாடப்பட்டது.  பூ அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு திருஅமுது வழங்கப்பட்டது. நாளை அதிகாலை 5:30 மணிக்கு, ‘சிற்றஞ்சிறு காலே வந்துன்னை சேவித்து’ எனத் துவங்கும் பாடலை பாடி, பக்தர்கள் பெருமாளை சேவிக்கின்றனர். ‘மிக அதிகாலையில் வந்து, உன்னை சேவித்து தாமரை போன்ற உன் திருவடிகளை துதிக்கும் காரணத்தை கேட்டுக்கொள். பசுக்களை மேய்த்து ஜீவனம் செய்யும், ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்லக் கூடாது. நாங்கள் விரும்பியவற்றை பெற்றவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் வரவில்லை. ஏழு ஜென்மத்துக்கும் உன்னுடன், சேர்ந்தவர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம். எங்கள் மற்ற ஆசைகளை அகற்றி, அருள வேண்டும். உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு, மற்ற பொருட்கள் மீது இச்சை ஏற்படாமல் காப்பாயாக’ என்பதே, இப்பாடலின் பொருளாகும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar