பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உலகநல வேள்விக்குழு மற்றும் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் சார்பில் மார்கழி மாத ஆன்மிக விழாக்கள் நடத்தப்பட்டன. மார்கழியில், உலகநல வேள்விக்குழு மற்றும் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் இணைந்து பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமஙக்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். ஆனைமலை, சிங்காநல்லுார், தென்சங்கம்பாளையம், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மாதம் முழுக்க அதிகாலை பஜனை ஊர்வலம் நடத்தப்பட்டது. கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி, பாவை நோன்பு கொண்டாடப்பட்டது. கிராமங்களில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கருமாபுரம் மாகாளியம்மன் கோவிலில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை, கோ பூஜை நடந்தது. விழாக்களில் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் பங்கேற்றனர்.