பதிவு செய்த நாள்
13
ஜன
2018
12:01
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ விழா, இன்று துவங்கி, 22 வரை, 10 நாட்கள் நடக்கிறது. நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும், வீரராகவர் கோவிலில், ஆண்டுக்கு இருமுறை பிரம்மோற்வம் நடக்கிறது. தை அமாவாசை அன்று, சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சியளித்த நாள். அதையொட்டி, தை பிரம்மோற்சவம் சிறப்பாக கருதப்படுகிறது. கோவிலைச் சார்ந்த ஹிருத்தாபநாசினி புண்ணிய குளத்தில் நீராடி, வீரராகவரை சேவிக்கும் பக்தர்களுக்கு, தீராத நோய்களை தீர்க்கும் வைத்தியராஜனுக்கு, நாளை, பிரம்மோற்சவம் துவங்குகிறது. 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில், பெருமாள் வீதி உலா நடைபெறும்.