பதிவு செய்த நாள்
15
ஜன
2018
01:01
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா (டான்டீ) இரண்டாம் டிவிஷன். இங்குள்ள துர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிேஷக விழா வரும், 21ம் தேதி நடக்கிறது. கோவில் வளாகத்தில் விநாயகர், முருகன், நாககண்ணியம்மாள், வேட்டை கருப்புசாமி, மதுரைவீரன் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதனிடையே, நேற்றுமுன்தினம் காலை, 9:30 மணிக்கு காப்புகட்டுதல் மற்றும் முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சி மக்கள் பிரதிநிதி தர்மராஜ் தலைமையில் நடந்தது. வரும், 20ம் தேதி மாலை, 3:00 மணிக்கு சின்கோனா முதல் பிரிவு சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி தீர்த்தம் மற்றும் முளைப்பாரி மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்படுகிறது. விழாவில் வரும், 21ம் தேதி காலை, 9:30 மணிக்கு மகா கும்பாபிேஷக விழாவும், அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.