கீழக்கரை; உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் திருவண்ணாமலை ஸ்ரீரமணாச்சரமத்தின் சார்பாக ராமநாதபுரம் ரமணகேந்திரம், முருகனார் மந்திரத்தில் இருந்து 15 ம் ஆண்டு உலக நன்மைக்கான கூட்டு வழிபாடு நடந்தது.ரமணமகிரிஷியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அருணாசல அட்சரமணமாலை 108 கன்னிகள் பாராயணம் செய்யப்பட்டது. பொறுப்பாளர் சிரஞ்சீவி ஏற்பாடுகளை செய்திருந்தார். ரமணரின் போட்டோ வழங்கப்பட்டது. ஆன்மிக சொற்பொழிவு, ரமணரின் போதனைகள் விளக்கி கூறப்பட்டது.