தை அமாவாசை முன்னிட்டு குளித்தலை கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2018 01:01
குளித்தலை: தை அமாவாசையில், குளித்தலை சுற்றுவட்டார கோவில்களில், சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. குளித்தலை மாரியம்மன் கோவில், கடம்பவனேஸ்வர் கோவில், அய்யர்மலை கோவில்களில் காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து, கோவிலில் நடந்த, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையில் கலந்துகொண்டனர். இதேபோல், குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றங்கரையில், திதி கொடுத்து மக்கள் முன்னோர்களை வழிபட்டனர். இதில், குளித்தலை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.