Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் ... 27 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவி.,ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கோவில்களிலும் நிரம்பி வழிந்த பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
01:01

காஞ்சிபுரம் : காணும் பொங்கலான நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுற்றுலா இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சில இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக, பொங்கல் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று போகி பண்டிகை துவங்கி, காணும் பொங்கலான நேற்று வரை அனைத்து இடங்களிலும், எல்லா தரப்பினரும்,பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, காணும் பொங்கலன்று, விடுமுறையில் உள்ள பலரும், உறவினர் வீடுகளுக்கும், கோவில்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் செல்வது வழக்கம்.

அந்த வகையில், சுற்றுலா இடங்களில் வெளியூர்வாசிகள் கூட்டம் அலைமோதும் என்பதால், பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், மாமல்லபுரம், முட்டுக்காடு படகு குழாம், வடநெம்மேலி முதலை பண்ணை, முதலியார் குப்பம் படகு குழாம், வண்டலுார் உயிரியல் பூங்கா... வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் குவிந்ததால், அந்த இடமே நிரம்பி வழிந்தன. செய்யூர் தாலுகாவில் பொழுதுபோக்கு தலங்களில், முக்கியமாக கருதப் படுவது, முதலியார்குப்பம் படகு குழாம். சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற ஊர்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணியர், படகு குழாமிற்கு குவிந்தனர்.

படகு சவாரி:  அங்குள்ள குட்டித்தீவுக்கு, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணியர் குவிகின்றனர். அதற்கேற்றாற் போல், சுற்றுலா வாகனங்களை நிறுத்த இட வசதி ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்கும் அரசு பேருந்துகள், இந்த படகு குழாம் அமைந்துள்ள இடத்தில் பேருந்தை நிறுத்த வேண்டும் என சுற்றுலா பயணியர் நேற்றும், இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பக்தர்கள் கூட்டம்: கோவில் நகரமான காஞ்சி புரத்தில் வழக்கமாகவே, அனைத்து கோவில்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். காணும் பொங்கலான நேற்று, வெளியூர் பக்தர்கள் பலரும் காஞ்சிபுரத்திலுள்ள கோவில்களை தரிசனம் செய்தனர். ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜபெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. இதேபோல், மறைமலை நகர் அடுத்த அனுமந்தபுரத்தில், 1000 ஆண்டுகள் பழமையான அகோரவீரபத்திரர்சுவாமி கோவிலிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பழமை வாய்ந்த இக்கோவில் செவ்வாய் தோஷ பரிகார தலமாகவும், சுற்றுவட்டார பகுதி மக்களின் குலதெய்வமாகவும் உள்ளது. இங்கு பவுர்ணமி, அமாவாசை தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். நேற்றைய செவ்வாய் கிழமையில் தை அமாவாசை, காணும்பொங்கல், என சிறப்பு விழாக்களும் சேர்ந்து வந்ததால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிங்கபெருமாள் கோவிலிலிருந்து அனுமந்தபுரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

குவிந்த பயணியர்: கிழக்கு கடற்கரை சாலையில், திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் காணும்பொங்கலான நேற்று சுற்றுலா பயணியரின் வருகை அதிகளவில் காணப்பட்டது. கோவளம், முட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணியருக்கு தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை முதலே இப்பகுதிகளில் சுற்றுலா பயணியரின் வருகை அதிகமாக இருந்தது. முட்டுக்காடு படகு குழாமில் உள்ள படகுகளில் தங்கள் குடும்பத்தினருடன் ஜாலியான சவாரியும், கோவளம் கடற்கரையில் சிறு விளையாட்டையும் முடித்து, பின் கோவளம் கார்மேல் அன்னை திருத்தலம், தர்கா... புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில், திருப்போரூர் கந்தசாமி கோவில் உள்ளிட்ட வழிபாடு தலங்களுக்கும் சென்று, மக்கள் தங்கள் கொண்டாட்டங்களை முடித்தனர். மக்கள் வருகை அதிகமாக இருந்த இப்பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

மாமல்லபுரம்: பொங்கல் பண்டிகையின், காணும் பொங்கல் நாளான நேற்று, சென்னை, சுற்றுப்புற பகுதியினர், சுற்றுலா இடமான மாமல்லபுரத்தில் குவிந்தனர். அரசு சிறப்பு பேருந்துகள், சுற்றுலா வாகனங்களில், காலை, 11:00 மணி முதல், பயணியர் வர துவங்கி, படிப்படியாக கூட்டம் அதிகரித்தது. சுற்றுலா வாகனங்கள், பயணியருக்கு இடையூறின்றி, பக்கிங்ஹாம் கால்வாய்க்கரை, அணுசக்தி வளாக சாலைகள் பகுதிக்கு அனுப்பப்பட்டு, அங்கு மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்பட்டன. அரசு, மாநகர் பேருந்து, புறவழிச்சாலை சந்திப்பிலிருந்தே இயங்கி, அவற்றில் வந்த பயணியர், அங்கேயே இறக்கி, ஏற்றப்பட்டனர். அங்கிருந்து, பேருந்து நிலைய பகுதிக்கு செல்ல, மாநகர் சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. கலைச்சின்ன பகுதிகளில், குடும்பத்தினர், நண்பர்கள், காதலர்கள் என, பயணியர் கூட்டம் அலைமோதியது. சிற்பங்களை கண்டுகளித்து, புகைப்படம் எடுத்து, மகிழ்ந்தனர். மரத்தடி, பாறைக்குன்று, கடற்கரையில் கூடி அமர்ந்து உண்டனர்; திண்பண்டம் சுவைத்தனர். கடல் அலையில் விளையாடி, கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர். கைவினைப்பொருட்கள், உணவக, தேநீர், குளிர்பானம் உள்ளிட்ட கடைகளில், வியாபாரம் களைகட்டியது.

வேடந்தாங்கல்: மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. கானும்பொங்கலான நேற்று, சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர், சரணாலயத்திற்குள் குவிந்தனர். சுமார், 25 ஆயிரம் பறவைகள் குவிந்துள்ள சரணாலயத்தை, சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர். பறவைகளை புகைப்படம் எடுத்தும், குடும்பத்துடன் ஏரிக்கரையில் அமர்ந்து, பயணியர் பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar