பதிவு செய்த நாள்
17
ஜன
2018
01:01
ப.வேலூர்: பாண்டமங்கலம், பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்ளது. தேர் திருவிழா, நேற்று மதியம், கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 21 வரை இரவு அன்னம், சிம்மம், அனுமந்தம், சேஷ மற்றும் யானை வாகனங்களில், சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 22 காலை, 8:00 மணிக்கு மேல் பல்லக்கு உற்சவம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. ஜன., 23ல் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி வருதல், 24 அதிகாலை, 4:30 மணிக்கு மேல், 5:30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் திருவீதி உலா வருதல் நடக்கவுள்ளது. 25ல், தீர்த்தவாரி சக்கராஸ்நானம்; 26ல், வசந்த உற்சவம்; 27ல், புஷ்ப யாகம்; 28ல் கருட உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர், தக்கார், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.