செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 10:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.