நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் நேற்று தெப்பல் உற்சவம் நடந்தது. கடலுார் அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜ ராஜேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் 16ம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு கரிநாள் திருவிழா நடந்தது. அதனைத் தொடர்ந்து விநாயகர், ராஜ ராஜேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரர், வள்ளி தேவ சேனா சுப்ரமணியர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மற்றும் சுற்று பகுதியில் பரிவார மூர்த்திகள் மற்றும் சிவலிங்கங்கள், சித்தர்களுக்கு சிறப்பு அபிேஷக, மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஆலயத்தின் எதிரில் உள்ள குளத்தில் விநாயகர் தெப்பல் திருவிழா நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழவினர் செய்திருந்தனர்.