பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.வழக்கம்போல இந்தாண்டும் மார்கழி மாதம், 29 நாட்களும் ஆண்டாள் அருளிய திருப்பாவையை பெருமாள் பக்தர்கள் கோவில்களில் பாடினர். மார்கழி மாத நிறைவையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. இதில், கரிவரதராஜ பெருமாள் ஆண்டாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல ஆதிமூர்த்தி பெருமாள், ஆண்டாள் தாயாருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.