பதிவு செய்த நாள்
18
ஜன
2018
01:01
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், சிதிலமடைந்த மகா மண்டபம் இடிக்கப்பட்டு, புதிய மண்டபம் கட்டப்படுகிறது. மேட்டுப்பாளையம் அருகே, தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ேகாவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பண்டிகை, விடுமுறை நாட்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். கோவிலில் தற்போதுள்ள மகா மண்டபத்தின் மேற்கூரை சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதை இடித்து விட்டு, புதிய மண்டபம் கட்ட, கோவில் நிர்வாகம் முடிவு செய்து, மண்டபம் இடிக்கப்பட்டு வருகிறது.கோவில் உதவி கமிஷனர் ராமு கூறுகையில், கோவில் கருவறை அருகே, 21 அடி உயரம், 62 அடி நீளம், 45 அடி அகலத்தில் உள்ள மகா மண்டபம், 1980ல் கட்டப்பட்டது. மேற்கூரை சிதிலமடைந்துள்ளதால், புதிய மண்டபம் கட்டப்படுகிறது. தற்போது, துாண்கள் மற்றும் மேற்கூரை இடிக்கும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும், சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய மகா மண்டபம் சுமார் ௧ கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும், என்றார்.