பதிவு செய்த நாள்
18
ஜன
2018
01:01
பெரம்பூர்: சென்னை, பெரம்பூர், நெல்வயல் சாலையில், 18ம் நுாற்றாண்டில் தென்னிந்திய புத்த விகார் அமைப்பு சார்பில், புத்தர் கோவில் கட்டப்பட்டது. அயோத்யதாஸ் என்பவரால் பராமரிக்கப்பட்ட இக்கோவில், காலபோக்கில் அதன் இயல்பை இழந்தது. இந்நிலையில், பெரம்பூர் பந்தர் கார்டன் சாலையில், 200 ஆண்டுகளுக்கு பின், தென்னிந்திய புத்த விகார் அமைப்பு சார்பில், புதிய புத்தர் கோவில், சமீபத்தில் திறக்கப்பட்டது. நான்கு மாடி கட்டடத்துடன் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில், புத்த துறவிகள் தங்குமிடமும், அலுவலகமும் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில் திறப்பு விழாவில், இலங்கை, மியான்மர், மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட புத்த துறவிகள் பங்கேற்றனர். இங்கு, தினமும் காலை, 7:00 மணி மற்றும் மாலை, 6:00 மணிக்கு பூஜைகளும், பவுர்ணமி தினத்தில் பவுத்த உபதேஷங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.