பதிவு செய்த நாள்
18
ஜன
2018
01:01
ராசிபுரம்: ராசிபுரம், பாவை நிருத்யாலயா நடனப் பள்ளியில், ஆண்டாள் சரித்திரம், சூடிக் கொடுத்த சுடர்கொடி என்ற இசை நிகழ்ச்சி நடந்தது. கல்வி நிறுவன தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார். ஏ.என்.எஸ்., கும்பகோணம் ஜூவல்லர்ஸ் மற்றும் ஏ.என்.எஸ்., திவ்யம் ஜூவல்லர்ஸ் நிறுவனங்களின் பங்குதாரர் ஆனந்த்குமார், ராசிபுரம் இன்னர்வீல் இன்டர்நேஷனல் சங்க மாவட்ட உறுப்பினர் தெய்வானை ராமசாமி, ஜேசீஸ் பயிற்சியாளர் கோகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். குழும பள்ளிகளின் இயக்குனர் சதீஷ் வரவேற்றார். குழந்தைகளின் உற்சாக நடனம், ஆசிரியர்களின் வழிநடத்தல், ஈடுபாடு, ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாவையையே மேடையில் கொண்டு வந்தது. மாலை மாற்றினாள் கோதை அரங்கேற்றமானது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. கல்வி நிறுவனங்களின் இயக்குனர் அவந்தி ராஜவேல், நாட்டியப்பள்ளி இயக்குனர் அனுபமா நரேஷ், பாடகர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஒப்பனைக் கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன், துணைத்தலைவர் மணிசேகரன், செயலாளர் பழனிவேல், இணைச்செயலாளர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.