Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் 24 மணி நேரம் கட்டுப்பாட்டு ... திருக்கோவிலூர் தென்பெண்ணையில் தீர்த்தவாரி திருவிழா திருக்கோவிலூர் தென்பெண்ணையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போரை விட அபாயம் போதை பொருள்: அமிர்தானந்தமயி கவலை
எழுத்தின் அளவு:
போரை விட அபாயம் போதை பொருள்: அமிர்தானந்தமயி கவலை

பதிவு செய்த நாள்

19 ஜன
2018
11:01

மதுரை: ”போரை விட அபாயகரமானது போதைப் பொருட்கள்,” என, மாதா அமிர்தானந்தமயி கவலை தெரிவித்தார். மதுரை பசுமலை மடத்தில், மாதா அமிர்தானந்தமயி நடத்திய சத்சங்கம், பஜனை, தியானம், தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர் பேசியதாவது: உலகிலுள்ள அனைத்திற்கும் அகம், புறம் என இரண்டு பகுதிகள் உள்ளன. இவை இரண்டும் ஒன்றிணையும் போதுதான், எப்பொருளும் முழுமையடைகிறது. இன்று இதை மறந்துவிட்டு, உடலுக்கும், புலன் இன்பத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர். உள்ளுணர்வையும், பேருணர்வையும் மனிதன் பொருட்படுத்துவதே இல்லை. இதுவே, இன்றைய உலகில் அனைத்து பிரச்னைகளுக்கும் அடிப்படை காரணம்.

தோகை விரித்தாடும் மயிலின் புற அழகு போலவும், பாடும் குயிலின் குரலில் நிறைந்திருக்கும் அக அழகு போலவும், குழந்தைகளின் வாழ்வில், அகமும் புறமுமான அழகு நிறையட்டும். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படட்டும். மனிதனால் மகிழவோ, நிம்மதியை அனுபவிக்கவோ இயலாத உலகத்தில் இன்று வாழ்கிறோம். போர் நிகழ்வதற்கான அச்சுறுத்தல்களுக்கும், பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்புகளுக்கும், இயற்கை சுரண்டலுக்கும், தற்கொலைக்கும், படுகொலைக்கும், இணையதள கொடுமைக்கும் சற்றும் குறைவில்லை. மதம், அரசியல் பிரிவினைகளால் கலகங்களும், போராட்டங்களும் ஒருபுறம் நடக்கின்றன. குடும்பங்களில்கூட, போட்டியும், போராட்டமும் நிறைந்த சூழ்நிலையே காணப்படுகிறது. யாரும் யாரையும் நம்புவதில்லை. யாருக்கும் யார் மீதும், உள்ளார்ந்த அன்பு இல்லை. முகமூடி அணிந்தவர்களின் உலகில்தான் நாம் வாழ்கிறோம். பழங்காலத்தில் பெரும்பாலானோர் கைக்கடிகாரம் அணிந்ததில்லை. ஆனால், அனைத்து வேலைகளையும் செய்வதற்கு, அவர்களுக்கு நேரம் இருந்தது. இன்று, சிறு பிள்ளைகள்கூட கடிகாரம் அணிந்துள்ளனர். ஆனால், யாருக்கும் எதற்கும் நேரமே இல்லை. பரந்த மைதானத்தில் விளையாடி வந்த காலம் போய், இன்று அலைபேசி மற்றும் தொலைக்காட்சி பெட்டிக்குள் சுருங்கிவிட்டது.

சுயநல மக்கள்: இன்று பெரியவர்கள் முதல், சிறு பிள்ளைகள் வரை சுயநலமும், வியாபார மனப்பான்மையும் கொண்டவர்களாக உள்ளனர். இரண்டையும் மதிக்கத்தக்கதாக கருதுகின்றனர். உலக சந்தையில் இவை இரண்டிற்கும் தான் அதிக தேவை இருக்கிறது. உயிர் வாழ பணம் தேவை. ஆனால், வாழ்க்கையே பணத்திற்காக என ஆகிவிடக்கூடாது. நற்பண்புகளை ஒதுக்கிவிட்டு மனமும், எண்ணங்களும் பணத்தையே சுற்றிச் சென்றால், அன்பு போலியாகிவிடும். தன்னலம் நிறைந்த சிந்தனைகளும், செயல்களும் உலகியல் செல்வத்தைப்பெற உதவக்கூடும். ஆனால், அது மனதிலுள்ள இருளை இரு மடங்காக்கிவிடும். மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு அவசியம். இல்லையெனில் வாழ்வின் நிலையும், தரமும் நஷ்டமாகும். மனம் நல்ல வேலைக்காரனேயன்றி, நல்ல முதலாளி அல்ல. இன்று எண்ணற்ற இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். போரைக் காட்டிலும் போதை பொருள் பிரச்னை அபாயகரமானது. பல இளைஞர்களின் வாழ்க்கை போதையால் அழிந்துவிட்டது. இளைஞர்களுக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும். துன்பத்தில் வாடுபவர்களின் நிலையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். குழந்தைகளுக்கு, ஆன்மிக கருத்துகளையும் நற்பண்புகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது குழந்தைகளுக்கு ஆன்மிக நுாலை படித்துக் காட்டினால், தவறான வழியில் செல்ல நினைக்கும் குழந்தைகூட நல்வழிக்கு திரும்பும்.இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவாஷ்டமியை முன்னி்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோவில்களில் பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் பிப்., 4ம் தேதி முதல் பக்தர்களுக்கு அன்ன பிரசாதத்துடன் இனி மசால் வடையும் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் அருகே தேனுாரில் இருந்து முதல் அறுவடை நெல்லை பாரம்பரியமாக அழகர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar