பதிவு செய்த நாள்
20
ஜன
2018
12:01
ஈரோடு: ஈரோடு அருகே, தென்முகம் வெள்ளோட்டில் சாத்தந்தை குல தெய்வமான, ராசாசாமி மற்றும் நல்லமங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம், (ஜன 19) நடந்தது. பழமையான இக்கோவிலில், ஒன்பது ஆண்டுகளாக புனரமைப்பு பணி நடந்தது. கடந்த, 18ல் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது. வெள்ளிக்கிழமை காலை, கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமி, தொரட்டியம்மன், கோவில் ஆத்தா அய்யன், சாம்புவன் ஆகிய கோவில் கோபுர கலசங்களுக்கு, லால்குடி சிவாச்சாரியார் சிவராம், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றி, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலம் ராசாசாமி நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.